மொட்டு விரிந்து மலர்வதற்குள் முலை அறியா பெண்ணினத்தை குழந்தை, குமரி, கிழவி என கசக்கி எறியும் காமுகனே பாலியல் வன்கொடுமை பார் எல்லாம் கேட்குதையா ஏன் இந்த இழிநிலை எங்களுக்கு? ? எப்போது உணர்வீர்- ஆணினமே எப்போது உணர்வீர் தந்தை மகளையும் விட்டுவைக்கவில்லை சாமியார், பக்தையையும் விட்டுவைக்கவில்லை உடல்வலி, உள்ளவலி ஓராயிரம் எங்களிடம் சொல்லதான் முடியவில்லை சொல்வதை கேட்க ஆளில்லை உணர்வீர் ஆணினமே! !!