மனிதனாக வாழ்ந்திடு
இளைஞனே,
என்ன படித்தாய்?
பட்டத்திற்கும், வேலைக்குமா கல்வி?
நீ கற்ற கல்வியின் பயன் என்ன?
தமிழ் படிக்கவில்லையோ?
செய்யற்க, இன்னுயிர் நீக்கும் வினை
என்ற குறள் கற்கவில்லையோ?
தமிழனே, தமிழைப்படி
அற இலக்கியத்தில் ஆயிரம் கருத்துக்கள்
அள்ளி எடுக்க உள்ளன!
கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக !
வள்ளுவரின் வார்த்தைப்படி
வாழ கற்றுக்கொள் !
நீ படித்தவனா? என்ற கேள்வியைப்
பிறர் எழுப்ப விடாதே
நான் படித்தவன் என்பதை
வாழ்வில் வாழ்ந்துகாட்டு
மனிதனே, மனிதநேயம் வளர்த்துக்கொள்
இந்த நொடி இவ்வுலகில் வாழ்கிறோம்
அடுத்த நொடி உடலில் உயிர் நிலைக்குமா?
தெரியாத உலகில் வாழ்கிறோம் - இதில் சாதி, மதம் வேறுபாடு எதற்கு?
மனிதனே, மனிதனாக வாழ்ந்திடு! !!