Posts

முதுமை

கடந்த கால நினைவுகளை அசைபோட்டு நிகழ்கால நினைவுகளை நினைப்பூட்டி வருங்கால எதிர்வுகளை எண்ணி  ஏக்கம் கொள்பவர்கள் இவர்கள்! !

ஆணினமே உணர்வீர் :

மொட்டு விரிந்து மலர்வதற்குள் முலை அறியா பெண்ணினத்தை குழந்தை, குமரி, கிழவி என கசக்கி எறியும் காமுகனே பாலியல் வன்கொடுமை பார் எல்லாம் கேட்குதையா ஏன் இந்த இழிநிலை எங்களுக்கு? ? எப்போது உணர்வீர்- ஆணினமே எப்போது உணர்வீர் தந்தை மகளையும் விட்டுவைக்கவில்லை சாமியார், பக்தையையும் விட்டுவைக்கவில்லை உடல்வலி, உள்ளவலி ஓராயிரம் எங்களிடம் சொல்லதான் முடியவில்லை சொல்வதை கேட்க ஆளில்லை உணர்வீர் ஆணினமே! !!

கேள்வி

முடியுமா? என்ற கேள்வி அச்சத்தை வருவிக்கும் முடியும். என்ற பதில் தன்னம்பிக்கையை விளைவிக்கும். முடியும் என்று முனைந்து பார் முன்னேற்றம் காண்பாய்! ! 

மனைவியின் நிலை

கணவன் இல்லாத இடத்தை  கைப்பிடித்துக் கொடுத்த தந்தையாலும் பெற்றெடுத்த தாயாலும்  நாம் பெற்ற பிள்ளையாலும்  ஈடுசெய்ய முடியாது 

கடவுளே, பெண்குழந்தைகளைக் காப்பாற்று

புதுச்சேரிக்கு மட்டுமல்ல பூமிக்கே அதிர்ச்சி!  விளையாடும் சிறுமி விளையாட்டுப் பொருள் உனக்கு!  கஞ்சாப் போதையாம் காரணம் கூறப்பட்டது 59க்கும் 19க்கும் இடையே குழந்தையை சிதைப்பதில் போட்டியாம்!  பிய்க்கப்பட்ட பிஞ்சுஉடல் அனுபவித்தக் கொடுமையை என்னவென்று சொல்வது!  இப்படிப்பட்ட காமுகன்கள் எப்போது இப்பூமியிலிருந்து வேரறுக்கப்படுவர்? இருவரையும் அங்கங்கள் அறுத்து அணுவணுவாக சிதைத்து தீர்ப்பளிக்க வேண்டும்  கடவுளே!!!

வேண்டுகோள்

பெண்களுக்கென்று தினம் வேண்டாம்! பெண்கள் உடலைப் பிறர்கவர நினைக்க வேண்டாம்!   குழந்தை உடலைக் கூறுபோட நீ யாரடா? ?  மனம் மழுங்கி, அறிவு அழிந்து உடல் மட்டுமே உணர்வு கொண்ட நீ மனிதனே இல்லை கோர மிருகம் உன் வீட்டிலும் பெண் உண்டு புரிந்து கொள்! !

இக்கால வளர்ச்சி

இக்கால வளர்ச்சி  அவரவர் வாழ்க்கையில் சுயம் என்பது முதன்மை அடுத்தவரைப் பற்றி எண்ணினால் அது அபூர்வம் இக்காலப் பரிணாம வளர்ச்சியில் இது இயல்பாகிப் போனது