இறைவன் அளித்த தண்டனை
அவர் இருந்திருக்கலாம்
இருந்திருக்கலாம்.....
என்ற எண்ணப் போராட்டம்
எழும்பொழுதெல்லாம்,
ஏன்? ஏன்? ஏன் கடவுளே
எடுத்துக்கொண்டாய்?
என்ற கேள்வி எழுகிறது!
என்மகள் அப்பாஎன்று
அழைக்க முடியாத
அவலநிலை !
தந்தை பாசம்தேடும்
கண்ணீர்த் துளிகள்
அவள் விழியில்
காணும் போது
அவர் இருந்திருக்கலாம்... !