கடவுளே, பெண்குழந்தைகளைக் காப்பாற்று

புதுச்சேரிக்கு மட்டுமல்ல
பூமிக்கே அதிர்ச்சி! 
விளையாடும் சிறுமி
விளையாட்டுப் பொருள் உனக்கு! 
கஞ்சாப் போதையாம்
காரணம் கூறப்பட்டது
59க்கும் 19க்கும் இடையே
குழந்தையை சிதைப்பதில்
போட்டியாம்! 
பிய்க்கப்பட்ட பிஞ்சுஉடல்
அனுபவித்தக் கொடுமையை
என்னவென்று சொல்வது! 
இப்படிப்பட்ட காமுகன்கள்
எப்போது இப்பூமியிலிருந்து
வேரறுக்கப்படுவர்?
இருவரையும் அங்கங்கள் அறுத்து
அணுவணுவாக சிதைத்து
தீர்ப்பளிக்க வேண்டும்  கடவுளே!!!

Popular posts from this blog

மனிதனாக வாழ்ந்திடு

புது வாழ்வு

இறைவன் அளித்த தண்டனை