பங்களிப்பு
ஒருவரின் இன்ப துன்பத்தை
பிறரிடம் பகிரலாம் _ ஆனால்
அவ்உணர்வை அவர்மட்டுமே
அனுபவிக்க முடியும்!
உனக்காக வாழ்கிறேன்
உனக்காக வருந்துகிறேன்
நீ இல்லையென்றால்
நான் இல்லை
இவைஎதுவும் உண்மையில்லை!
அவரவர் வாழ்க்கையை
அவரவர் வாழ்கின்றனர் இதில்
அடுத்தவரின் பங்களிப்பு
சில தூரமே! !!