சொட்டு இரத்தம்
விலைமதிப்பு
என் கண்களிலிருந்து விழும் முத்தொன்றை
புலவனொருவன் பார்த்திருந்தால்
கவி ஒன்று புனைந்திருப்பான்!
மனு ஒருவன் பார்த்ததினால்
எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் என்று
இகழ்ந்தல்லவா கூறுகிறான்!
இது,முக்கால நிகழ்ச்சியில்
வெந்த புண்களிலிருந்து
வடியும் சொட்டு இரத்தமாகும்
லிட்டர் இரத்தமே விலைபெறாதபோது
என் சொட்டு இரத்தத்திற்கு....???