ஆணினமே உணர்வீர் :

மொட்டு விரிந்து மலர்வதற்குள்
முலை அறியா பெண்ணினத்தை
குழந்தை, குமரி, கிழவி என
கசக்கி எறியும் காமுகனே

பாலியல் வன்கொடுமை
பார் எல்லாம் கேட்குதையா
ஏன் இந்த இழிநிலை
எங்களுக்கு? ?

எப்போது உணர்வீர்- ஆணினமே
எப்போது உணர்வீர்
தந்தை மகளையும் விட்டுவைக்கவில்லை
சாமியார், பக்தையையும் விட்டுவைக்கவில்லை

உடல்வலி, உள்ளவலி ஓராயிரம்
எங்களிடம்
சொல்லதான் முடியவில்லை
சொல்வதை கேட்க ஆளில்லை
உணர்வீர் ஆணினமே! !!

Popular posts from this blog

கடவுளே, பெண்குழந்தைகளைக் காப்பாற்று

இக்கால வளர்ச்சி